ரூ. 800 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள்-செந்தில் பாலாஜி பேட்டி

ரூ. 800 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள்-செந்தில் பாலாஜி பேட்டி;

Update: 2025-08-16 10:40 GMT
ரூ. 800 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள்-செந்தில் பாலாஜி பேட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3 மற்றும் 4 பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய கட்டளை காவிரி ஆற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரை இயக்கி துவக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு பணிகளாக முடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சியின் 3- மற்றும் 4- மண்டல பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய திட்டமாக ரூபாய் சுமார் 800 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம், புதிய குடிநீர் திட்டம் போன்ற இரண்டு திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் பெற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்புதல் பெற்ற பிறகு பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றார்.

Similar News