பட்டா மாறுதல் செய்ய விவசாயிக்கு 8000 லஞ்சம் பெற்ற வி ஏ ஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.
ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூபாய் 8ஆயிரம் லஞ்சம் பெற்ற வீடியோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
அரியலூர், ஏப்.23- ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாறுதல் செய்ய விவசாயிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்* அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவர் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர் பட்டா மாறுதல் செய்வதற்காக வேண்டி விஏஓ செல்வராஜிடம் அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்வதற்கு ரூ.8000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகுமார் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் மை ரூ.8 ஆயிரத்தை சுகுமார் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். அந்த பணத்தை விஏஓ செல்வராஜிடம் சுகுமார் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விஏஓ செல்வராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த ரூபாய் 8000 லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து மேலும் அவரது அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.