நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 91.94 மாணவர்கள் தேர்ச்சி

மாணவிகள் வழக்கம் போல் மாணவர்களை விட 4.37 சதவீதம் கூடுதல் தேர்ச்சி;

Update: 2025-05-16 10:53 GMT
நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. அரசு பொது தேர்வை எழுதிய மாணவர்கள் 4092, மாணவிகள் 4146, ஆக மொத்தம் 8238. தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் 3672, மாணவிகள் 3902, ஆக மொத்தம் 7574 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.74 சதவீதமும், மாணவிகள் 94.11 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில், 91.94 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2024 -ம் ஆண்டு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 89.70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டு கூடுதலாக மாவட்டத்தில் 2.20 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 93, ஆதி திராவிட பள்ளிகள் 2, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் 9, பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 8, சிறப்பு பள்ளிகள் 2, சுயநிதி பள்ளிகள் 2, மெட்ரிக் பள்ளிகள் 21 ஆக மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் அரசு பள்ளிகள் 21, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் 1, பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 3, சுயநிதி பள்ளிகள் 1, மெட்ரிக் பள்ளிகள் 13, சிறப்பு பள்ளிகள் 2 ஆக மொத்தம் 41 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேத்தாக்குடி தெற்கு அரசு பள்ளி, புஷ்பவனம் அரசு பள்ளி, கீழ்வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆக மொத்தம் 41 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த 2024- ம் ஆண்டு மாநில அளவில் 29- வது இடமும், நடப்பாண்டு 31-வது இடமும் பெற்றுள்ளன. நாகை மாவட்ட அரசு பள்ளிகள் மாநில அளவில் கடந்த 2024-ம் ஆண்டு 25- வது இடமும், நடப்பாண்டு 28- வது இடமும் பெற்றுள்ளன. அதேபோல், நாகை மாவட்டத்தில், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் மாணவர்கள் 3262, மாணவிகள் 3991 ஆக மொத்தம் 7253 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், மாணவர்கள் 2951, மாணவிகள் 3831 ஆக மொத்தம் 6782 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 90.47 சதவீதமும், மாணவிகள் 95.99 சதவீதமும், மாவட்டத்தில், 93.51 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.09 சதவீதமும், நடப்பாண்டு கூடுதலாக 2.42 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 44 அரசு பள்ளிகளில் 7 பள்ளிகளும், 28 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 பள்ளிகளும், ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 72 பள்ளிகளில், 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாநில அளவில் மூன்றாவது இடமும், கடந்தாண்டு 13-வது இடமும் பெற்றுள்ளன.

Similar News