அரியலூரில் 962 பயனாளிகளுக்கு 13 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர்
அரியலூரில் 962 பயனாளிகளுக்கு 13 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.;
அரியலூர், ஏப்.15- அரியலூர் அருகே வாலஜாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சமூக நலத்துறை மகளிர் திட்டம் வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 962 பயனாளிகளுக்கு 13 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்