கரூர்-ரூ 98 ஆயிரம் பெற்று ஏமாற்றிய வருக்கு 3- லட்சம் அபராதம்.நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு.
கரூர்-ரூ 98 ஆயிரம் பெற்று ஏமாற்றிய வருக்கு 3- லட்சம் அபராதம்.நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு.;
கரூர்-ரூ 98 ஆயிரம் பெற்று ஏமாற்றியவருக்கு 3- லட்சம் அபராதம்.நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு. கரூர் மாவட்டம், வெங்கமேடு டிஎஸ்பி தெருவை சேர்ந்த நவீன் குமார் என்பவர் (பைஜூஸ்) Byju’s என்ற I A S தேர்வு பயிற்சிநி றுவனம் செய்த விளம்பரத்தை பார்த்து 28-09-23 அன்று ரூ.98,000 பணம் செலுத்தி பயிற்சி பெற சேர்ந்துள்ளார் இந்த பயிற்சிகள் ஆன்லைனிலும் இணைய வழி நேரலையில் விளக்கம் தரப்படும் எனவும், பயிற்சிக்கு கையேடுகள் தரப்படும் எனவும் பைஜூஸ் நிறுவனம் உறுதி அளித்தது. இதை நம்பி பணம் செலுத்திய நவீன் குமாருக்கு பைஜூஸ் நிறுவனம் உறுதி அளித்தபடி எந்தவிதமான பயிற்ச்சியோ பயிற்சிக்கான நூல்களையோ அளிக்கவில்லை மேலும் இது தொடர்பாக நவீன் குமார் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு மேற்படி நிறுவனம் பதில் அளிக்கவில்லை இதனால் பெரும் மன உளைச்சல் அடைந்த நவீன் குமார் பைஜீஸ் நிறுவனம் மீது கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் 23.11.24 ல் கரூர் வழக்கறிஞர் இராஜேந்திரன் மூலமாக தாக்கல் செய்தார் மனு மீது விசாரணை நடத்திய கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதிகள் மனுதாரர் நவீன் குமாருக்கு பைஜூஸ் நிறுவனத்தில் செலுத்திய ரூ. 98,000- திருப்பி தர வேண்டும். நவீன் குமாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.3,00,000-தர வேண்டும் . வழக்கு செலவு தொகையாக ரூ. 10,000 தர வேண்டும் என பை ஜூஸ் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.