அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் 99 -ம் ஆண்டு முப்பெரும் விழாவில்
அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் 99 -ம் ஆண்டு முப்பெரும் விழாவில்;
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கீழவாழக்கரையில் அமைந்துள்ள, ஸ்ரீ சரஸ்வதி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் 99 -ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, கல்வி குழு தலைவர் கே.எஸ்.ஜி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி வீ.கிருஷ்ணசாமி, பள்ளி செயலர் என்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் க.முருகவேல் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக, கீழையூர் வட்டார கல்வி அலுவலர் தை.லீனஸ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முன்னதாக, நடைபெற்ற விளையாட்டு விழாவை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் கா.செங்குட்டுவன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இரவு நடைபெற்ற விழாவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் பல்வேறு நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். தேசப்பற்றை பறைசாற்றும் வகையில், பிரமிடு வடிவில் பல்வேறு யோகாசனங்களை செய்து மாணவிகள் அசத்தியதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். முடிவில், பள்ளி இடைநிலை ஆசிரியர் சீ.சத்தியநாராயணன் நன்றி கூறினார். விழாவை, ஆசிரியர் முத்துக்குமாரசாமி ஒருங்கிணைத்தார்.