பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக AITUC வேலை நிறுத்தம்
Update: 2023-10-09 07:40 GMT
வேலை நிறுத்தம்
சின்டெக்ஸ் கம்பெனியில் பணிபுரியும் AITUC தொழிற்சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் 9 பேரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏனைய தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் துணைத் தலைவர் R.செங்கோட்டையன், செயலாளர் K.ராஜா, பொருளாளர் M.வசந்தகுமார், துணைச் செயலாளர் N.சிவகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். AITUC மாவட்ட தலைவர் S.மணிவேல் கண்டன உரை ஆற்றினார். மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராசிபுரம் நகர செயலாளர் S.மணிமாறன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.