பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் BLA -2, BDA ஆலோசனைக் கூட்டம்.

21 வார்டுக்கும் அதிகபட்சம் 45 ஆயிரம் வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக மாற்றினால் மிகப் பெரிய வெற்றி நமக்குத்தான், எனவே ஒவ்வொரு பாக நிலை முகவர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்;

Update: 2025-07-07 16:42 GMT
பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் BLA -2, BDA ஆலோசனைக் கூட்டம். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும், நகர கழகச் செயலாளருமான ம.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது! தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரம்பலூர், "ஓரணியில் தமிழ்நாடு" வெல்வோம் இருநூறு!, '"படைப்போம் வரலாறு" தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி, மொபைல் செயலி மூலம் எவ்வாறு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான ம.பிரபாகரன் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க. சித்தார்த்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, பெரம்பலூர் நகரில் 21 - வார்டுகள், 41 பூத்களிலும் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதில் நமக்கு 30 % வாக்குகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் நமக்கு ஏற்கனவே 18000 வாக்குகள் தி.மு.க.விற்கு உள்ளன. ஆகையால் ஒவ்வொரு வார்டுக்கும் 2000 வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்க்க நாம் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வேண்டுகோளை இலக்காக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். எனவே 21 வார்டுக்கும் அதிகபட்சம் 45 ஆயிரம் வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக மாற்றினால் மிகப் பெரிய வெற்றி நமக்குத்தான், எனவே ஒவ்வொரு பாக நிலை முகவர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், நகர துணை செயலாளர் நூ‌.சபியுல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்க்காக பாக நிலை டிஜிட்டல் முகவர்களுக்கு செல்போன் வழங்கப்பட்டது.

Similar News