கே. ஆர். பி. அணையில் செத்து மிதக்கும் மீன்கள் - கழிவுநீர் கலப்பால் விபரீதம்
கே. ஆர். பி. அணைக்கு தொழிற்சாலை கழிவுகளுடன் வரும் நீரால் மீன்கள் செத்து மிதப்பதாக புகார் எழுந்துள்ளது.
Update: 2024-05-17 05:06 GMT
தமிழ் நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மழை பெய்து வரும் நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீர் கடும் துர்நாற்றத்துடன் ரசாயன கழிவு நீருடன் தண்ணீர் வந்தது. இந்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் கழிவு நீர் கலந்து வந்ததால் அணையில் வளர்ந்திருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கெலவரப்பள்ளி அணையில் கலந்து வெளியேற்றப்படும் நீரில் நுரையுடன் நீர் வெளியேற்றப்படுகிறது .இந்த நீர் கே ஆர் பி அணையில் வந்த நிலையில் மீன்கள் செத்து மிதப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.