நாமக்கல்லில் வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!-நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு!
நவம்பர் -18 செவ்வாய்க்கிழமை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிப்பதாக வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முடிவெடுத்துள்ளனர்.;
தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள பணிக்கப்படுவதை கண்டித்தும் மேற்படி பணிகளை கூடுதலாக செய்ய ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்யப்படுவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் சார்பாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகாந்த் தலைமையில் வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தினர். நவம்பர் -18 செவ்வாய்க்கிழமை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிப்பதாக வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முடிவெடுத்துள்ளனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.செவ்வாய்க்கிழமை நடைப்பெறும் பணி புறக்கணிப்பில், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.