திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்ட Get Out Ravi என்ற ஹேஷ்டேக் கொண்ட சுவரொட்டிகள்
திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்ட Get Out Ravi என்ற ஹேஷ்டேக் கொண்ட சுவரொட்டிகள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்ட Get Out Ravi என்ற ஹேஷ்டேக் கொண்ட சுவரொட்டிகள்* ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மறுநாளே, தமிழக கவர்னர் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி, 'கெட் அவுட் ரவி' என்ற ஹேஷ்டேக்குடன் சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் அதே போல் திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுவர்களில் கெட் அவுட் ரவி என்ற ஹேஷ்டேக் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர் அவர்களை காப்பாற்றும் அதிமுக மற்றும் பாஜக கள்ள கூட்டணி எனவும் அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உருவம் பொறிக்கப்பட்ட கார்ட்டூன் பொம்மை சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன் நீங்க வெளியே போயிடுங்க என்று கூறுவது போலவும் அதே போல் ஆளுநர் ரவியின் உருவம் பொறிக்கப்பட்ட கார்ட்டூன் பொம்மை சூப்பர்யா நீ தான்யா உண்மையான விசுவாசி என்று கூறுவது போலவும் இந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன..