கோவையில் PROTAXI நிறுவனத்தின் மீது மோசடி புகார்!
கோவைச் சேர்ந்த PNJ Probuld Supplies Pvt. Ltd. என்ற PROTAXI நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார் எழுந்துள்ளது.;
கோவைச் சேர்ந்த PNJ Probuld Supplies Pvt. Ltd. என்ற PROTAXI நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஓட்டுநர்களிடம் வைப்பு தொகையாக ரூ.25,000 வரை பெற்று, ஒப்பந்தத்தின்படி மாதம் ரூ.70,000 வழங்க வேண்டிய நிலையிலும் அதனை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், வழக்கறிஞர்கள் சார்லஸ் மற்றும் ஸ்ரீமதி உடன் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், பணம் கேட்டபோது மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும், நிறுவனத்தால் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி இருப்பதாகவும் அவர்கள் புகார் மனுவில் கூறியுள்ளனர்.