சாலைகளில் சட்டவிரோத மூன்று சக்கர வாகனங்கள் – RTO அலட்சியம்!

திண்டுக்கல் சாலைகளில் சட்டவிரோத மூன்று சக்கர வாகனங்கள் – RTO அலட்சியம்!;

Update: 2025-08-19 04:04 GMT
திண்டுக்கல் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நூற்றுக்கணக்கான மூன்று சக்கர வாகனங்கள் எந்தவித வாகன பதிவு எண், இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தினமும் இயங்கி வருகின்றன. இவ்வாகனங்கள் அதிக சுமை ஏற்றி, விதிகளை மீறி இயங்குவதால் பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரிய அபாயமாக உள்ளது. கடந்த காலங்களில் பல விபத்துகள் நடந்திருந்தாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போக்குவரத்து காவல்துறை மற்றும் பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) இந்த சட்டவிரோத வாகனங்களை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றது என்பது பொதுமக்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத மூன்று சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய, விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, வலியுறுத்தப்படுகிறது.

Similar News