ஸ்டாலின் ஆட்சி Simply Waste - வடவள்ளியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு !

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தின் இரண்டாம் நாளாக கோவை வடவள்ளி பேருந்து நிலையத்தில் எழுச்சி உரையாற்றினார்.;

Update: 2025-07-09 09:11 GMT
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தின் இரண்டாம் நாளாக நேற்று கோவை வடவள்ளி பேருந்து நிலையத்தில் எழுச்சி உரையாற்றினார். மத்திய அரசுடன் இணைப்பு இல்லாமல், திட்டங்களை செயல்படுத்தும் திறமை திமுக அரசுக்கு இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், “ஸ்டாலின் அரசு குப்பை அரசு,Simply waste எனக் கடுமையாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு ஸ்மார்ட் சிட்டி, குடிநீர் திட்டங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் ஆகிய வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், திமுக அரசு அதையே ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கும் அரசாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். திமுக அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை; அப்படி ஒரு செயல் இருந்திருந்தால் மக்கள் ஏன் மாற்றத்தை நாட விரும்புவார்கள் என கேள்வி எழுப்பினார். தற்போதைய திமுக ஆட்சியை வரி உயர்வுகள், பாதுகாப்பு இல்லா சூழ்நிலை, தொழில் வீழ்ச்சி, விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சி ஆகியவையின் அடிப்படையில் கடுமையாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் வந்தால், மறுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்படும் என உறுதி அளித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில், அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவந்து, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

Similar News