கரூர் துயர சம்பவம்-SIT குழுவினர் 8-வது நாளாக விசாரணை.
கரூர் துயர சம்பவம்-SIT குழுவினர் 8-வது நாளாக விசாரணை.;
கரூர் துயர சம்பவம்-SIT குழுவினர் 8-வது நாளாக விசாரணை. கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 8-வது நாளாக இன்று கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர், தவெக நிர்வாகிகள், பிரச்சார நிகழ்ச்சிக்கு சவுண்ட் சர்வீஸ் சேவை வழங்கிய ஆடியோ இன்ஜினியர், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று 8-வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பல்வேறு மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.