கரூர் S.P பெரோஸ் கான் அப்துல்லா முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

கரூர் S.P பெரோஸ் கான் அப்துல்லா முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2025-01-14 14:08 GMT
கரூர் S.P பெரோஸ் கான் அப்துல்லா முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் மற்றும் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற காவலர்கள், பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Similar News