திருப்பத்தூரில் காவல்துறையினருக்கு இலவச பேருந்து பயண சீட்டை வழங்கிய sp

திருப்பத்தூரில் காவல்துறையினருக்கு இலவச பேருந்து பயண சீட்டை வழங்கிய sp;

Update: 2025-03-14 12:42 GMT
திருப்பத்தூரில் காவல்துறையினருக்கு இலவச  பேருந்து பயண சீட்டை வழங்கிய sp
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கான இலவச பேருந்து பயண அட்டையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அவர்கள் மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கினார். காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசால் வழங்கப்படும் பிரத்யேக பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் மாவட்டத்திற்குள் பணி நிமித்தமாக எந்த பகுதிக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு அரசால் வழங்கப்பட்ட 916 இலவச பேருந்து பயண அட்டையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர ஷ்ரேயா குப்தா மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து காவல்துறையினருக்கு வழங்கினார்.

Similar News