கோவை ரயில் நிலையத்தில் SRMU – AIRF சார்பில் தொழிலாளர் உரிமைகளுக்காக கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் SRMU மற்றும் AIRF சார்பில், கோவை ரயில் நிலையங்களில் நேற்று தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-10 13:37 GMT
இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் SRMU மற்றும் AIRF சார்பில், கோவை ரயில் நிலையங்களில் நேற்று தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோதமான நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், 2023 ஆம் ஆண்டுக்கான சி.ஆர்.சி பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எட்டாவது உதய குழு (8th CPC) அமைக்கப்பட்டு, அதன் terms of reference-ஐ வெளியிட வேண்டும் என்றும், மூன்று லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் RRB / RRC தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேலும், அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விசாலமான தொழிலாளர் கூட்டம் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி, தங்களது கோரிக்கைகளைத் தெளிவாகத் தெரிவித்தனர்.

Similar News