பள்ளப்பட்டி நகராட்சி குப்பைக் காடு பகுதியில் STP பிளான்ட் வருவதை தடுக்க வேண்டும்.

பள்ளப்பட்டி நகராட்சி குப்பைக் காடு பகுதியில் STP பிளான்ட் வருவதை தடுக்க வேண்டும்.;

Update: 2025-05-27 06:04 GMT
பள்ளப்பட்டி நகராட்சி குப்பைக் காடு பகுதியில் STP பிளான்ட் வருவதை தடுக்க வேண்டும். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் தெற்கு தெருவில் அமைந்துள்ள குப்பைக்காடு 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இல்லாத சமயத்தில் அமைக்கப்பட்டது ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பெண்கள் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி என சுற்றுவட்டாரம் முழுவதும் மக்கள் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் குப்பைக்காடு பகுதியின் மூலமாக அடிக்கடி பல்வேறு விதமான சுகாதார கேடுகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் மீண்டும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் STP பிளான்ட் இதே பகுதிக்கு அமைய இருக்கிறது . அது எங்களுக்கு மேலும் பல வித சுகாதாரக் கேட்டை உருவாக்கக்கூடும் எனவே அந்தத் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து மேலும் மாற்றுப் இடத்தில் இந்த குப்பை காட்டை அமைக்க வழிவகை செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரை சந்தித்து பள்ளப்பட்டி பகுதி வாழ் மக்கள் மனு அளித்தனர்.

Similar News