வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் V501A சார்பில் 3600 அடி நீளமுள்ள தேசியக் கொடியின் பேரணி..
வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் V501A சார்பில் 3600 அடி நீளமுள்ள தேசியக் கொடியின் பேரணி..;
வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் V501A சார்பில் சேலம் வைஷ்யா கல்லூரி வளாகத்தில் தேச ஒற்றுமை வலியுறுத்தியும், சமுதாய சேவையின் அவசியம், முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சேலம் வைஷ்யா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வாசவி கிளப் இன்டர்நேஷனல் (மாவட்டம் V501A) ஆளுனர் விஜயசங்கல்ப், ஏ.வெங்கடேஸ்வர குப்தா ஆகியோர் தலைமையில் திட்டத் தலைவர்கள் மற்றும் ராசிபுரம் வாசவி லட்சுமி பிரியா, குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தவாறு பேரணி நடத்தினர். இப்பேரணியில் 3600 அடி நீளமுள்ள தேசியக் கொடியினை மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள அணைத்து கிளப் தலைவர்கள், செயலாளர்கள் , பொருளாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்று தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.