1 கிலோ கஞ்சாவுடன் வந்தவர் கைது.
மதுரை சோழவந்தான் பகுதியில் 1கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் பகுதியில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கஞ்சாவுடன் நின்றிருந்த மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த சக்திவேலை (45) என்பவரை கைது செய்தனர். இவரிடம் விற்பனைக்கு கொண்டுவந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.