குமரி மாவட்டத்தில் பறக்கும் படை பறிமுதல் செய்த தொகை 1கோடி

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 1 கோடிக்கு மேல் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-30 16:52 GMT

பணம் பறிமுதல் 

குமரி மாவட்டத்தில் வாக்காளர் களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க 36 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று வேட்பாளர்கள் பிரசாரம் தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் இன்று காலை வரைமொத்தம் ரூ.1 கோடி 3 லட்சத்து 37 ஆயிரத்து 507 பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதில் கன்னியாகும ரியில் ரூ. 16 லட்சத்து 48 ஆயிரத்து 290, நாகர்கோவிலில் ரூ.31 லட்சத்து 32 ஆயிரத்து 100, குளச்சலில் ரூ.19 லட்சத்து 36 ஆயிரத்து 717, பத்மநாப புரத்தில் 5 லட்சத்து 61 ஆயிரத்து 950, விளவங்கோட்டில் ரூ.19 லட்சத்து 29 ஆயிரத்து 550, கிள்ளியூரில் ரூ.11 லட்சத்து 28 ஆயிரத்து 900 பறிமுதல்செய்யப்பட்டுள்ளது என்று அதிகா - ரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் நேற்று மட்டும் கன்னியா குமரியில் 2 ஆயிரம் நோட்டீஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நாகர்கோவிலில் 60 ஆயிரம், குளச்சலில் 2 லட்சத்து 12 ஆயிரம், விளவங்கோட்டில் ரூ.80 ஆயிரம் என்று ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News