மதுபோதையில் சுற்றித்திரிந்த பெண்ணிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் !
திருப்பூரில் மதுபோதையில் சுற்றி இருந்த பெண்ணிடம் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-29 05:06 GMT
மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அவர்கள் மேற்பார்வையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114-திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லூர் சர்ச் அருகே மாலை 36 வயது மதிக்கத்தக்க பெண் குடிபோதையில் சேலையில் சுற்றி இடுப்பில் மூன்று கட்டு பணத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அங்கு துணை மாநில வரி அலுவலர் திரு. குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு மணிமேகலை, சரவணக்குமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த கடைக்காரர்கள் சந்தேகத்தின் பெயரில் பெண் அதிக பணம் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஆவணம் இல்லாமல் வைத்திருந்த பணத்தை ரூபாய் 1லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்து மாநகராட்சி ஆணையர் பவன்குமார்.கிரியப்பனவர் முன்னிலையில் ஒப்படைத்தனர். மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் துறையூர், திருமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனைவி மணிமேகலை (வயது 36) என்பதும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவில் சென்று பிச்சை எடுத்த பணம் என தெரிவித்தார். உதவி ஆணையாளர் (கணக்கு பொறுப்பு) தங்கவேல் ராஜன் பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள நோ ஃபுட் நோ வேஸ்ட் காப்பாத்திற்க்கு அனுப்பி அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.