விழுப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே காரில் கடத்திய இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-01 08:48 GMT

விழுப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக காரில் மதுபாட்டில்கள் கடத்தப்ப டுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் சுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விழுப்புரம் மது விலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார், விழுப்புரம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை மேற்கொண்டதில் அந்த காரினுள் 25 அட்டைப் பெட்டிகளில் 357 மதுபாட்டில்கள் மற்றும் 10 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே காரில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும், கோவை மாவட்டம் சின்னையன்பாளையத்தை அடுத்த மயிலம் பட்டியை சேர்ந்தராஜ் மகன் பிரேம்குமார் (வயது 28), கோவை சரவணம்பட்டியை சேர்ந்த துரைராஜ் மகன் பூபதி (24) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கோவைக்கு கடத்திச்சென்று அங்குள்ள கார் வேன் உள்ளிட்ட வாகன டிரைவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிரேம்குமார், பூபதி ஆகிய 2 பேரை யும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கள், சாராய பாக்கெட்டுக ளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News