10-ரூபாய் இயக்கம் - சமூக ஆர்வலர் ஜெகநாதன் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி.

10-ரூபாய் இயக்கம் - சமூக ஆர்வலர் ஜெகநாதன் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி.;

Update: 2025-09-10 10:48 GMT
10-ரூபாய் இயக்கம் - சமூக ஆர்வலர் ஜெகநாதன் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி. கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன். இவர் கரூரில் நடைபெறும் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதனால் கல்குவாரியை சேர்ந்த சமூக விரோதிகள் அவரை லாரியை ஏற்றி கொலை செய்தனர். இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி 10 ரூபாய் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகர்,அமராவதி நதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் தென்னரசு உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மறைந்த ஜெகநாதனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி அவரது செயல்பாட்டை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News