உரம் கலந்த தண்ணீர் குடித்த 10 ஆடுகள் பலி
சங்கராபுரம் அருகே உரம் கலந்த தண்ணீரைக் குடித்த 10 ஆடுகள் பலி.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 05:24 GMT
ஆடுகள் பலி
சங்கராபுரம் அருகே உரம் கலந்த தண்ணீரைக் குடித்த 10 ஆடுகள் இறந்தன. சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன் மகன் அப்பாதுரை, 45; விவசாயி. இவர், 10 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான வயலில் ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்றன. வெகுநேரமாகியும் ஆடுகள் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் வயலுக்குச் சென்று பார்த்தபோது 10 ஆடுகளும் மர்மமான முறையில் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தன. அருகில் இருந்த தண்ணீர் தொட்டியை பரிசோதனை செய்ததில் அதில், பயிருக்காக யூரியா உரம் கலந்து வைத்திருந்த தண்ணீரை குடித்து இறந்ததிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.