ஊட்டி நகரில் 10டன் குப்பைகள் அகற்றம்

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா காரணமாக ஊட்டி நகரில் குவிந்த 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

Update: 2024-04-18 12:05 GMT

குப்பைகள் அகற்றம் 

ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஊட்டியில் தினமும் 36 டன் குப்பைகள் சேகரமாகி வருகிறது. இதில் 9 டன் நகராட்சி சந்தையிலிருந்து, லாரி மூலம் அப்புறபடுத்தப்பட்டு வருகின்றன. வா

ர்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பிரசித்தி பெற்ற ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாத் தேரோட்டம் நேற்று நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக ஊட்டி மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்தது. ஊட்டி நகர் நல அலுவலர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் சுகாதார பணியாளர்கள் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்த பத்து டன் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினர். 

Tags:    

Similar News