100 நாள் வேலை பணியாளர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் நீலோத் பாலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி 100 நாள் வேலை திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண்கள் தங்களது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை என்றும் பத்து நாளைக்கு ஒருமுறைதான் வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் கழிவு கால்வாய் வசதி முறையாக பராமரிக்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி இடம் கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு மாதத்தில் 7 நாட்கள் மட்டுமே வேலை தருவதால் குடும்ப சூழ்நிலை மிகவும் பாதிப்படைந்து இருப்பதால் பணிகளை அதிக நாட்கள் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும், சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கூடுதலாக வேலை வாங்க அதிகாரிகளிடம் பேசி கூறி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி பொது மக்களிடம் உறுதி அளித்தார்.