பேரூராட்சியிலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்- திருச்சி சிவா எம்.பி

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பேரூராட்சி பகுதிக்கும் விரிவு படுத்தப்படும் என பட்டணம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திருச்சி சிவா எம்.பி தெரிவித்தார்.

Update: 2024-04-07 02:57 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த வி.எஸ்.மாதேஸ்வரனை ஆதரித்து திருச்சி சிவா எம்.பி., பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுவையில், இன்றைக்கு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை, கிட்டத்தட்ட எங்களுடைய அறிக்கையே. நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து களம் காணுகிறோம். எங்களுடைய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அத்தனையும் தள்ளுபடி செய்வோம். மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஏழைப் பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் தரப்படும்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் வெறும் வாய் வார்த்தை அல்ல. நடத்திக் காட்டுவோம், சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம் என்கின்ற கட்சி நாங்கள் நாடாளுமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுத்த போது எங்கள் குரல்வளை நெறிக்கப்பட்டது. தொடர்ந்து போராடிய போது தண்டிக்கப்படும். இந்த பிரச்சாரத்தின் போது, பட்டணம் பேரூராட்சி பகுதிக்கும் 100 நாள் வேலை வேண்டும் எனக் பொதுமக்கள் கேட்டனர்.

அப்போது, எங்கள் கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் 400 ரூபாய் தரப்படும் என அறிவித்துள்ளோம். இந்த திட்டம் பேரூராட்சி பகுதிக்கும் கொண்டு நடைமுறை படுத்துவோம், அதற்கான திட்டம் வைத்துள்ளோம் என்றார். பட்டணம் பேரூராட்சி செயலாளர் பொன்.நல்லதம்பி, ஒன்றிய கழக செயலாளர் கே.பி. ஜெகநாதன், பொறுப்பாளர் கவுன்சிலர் விநாயக மூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News