100 கிலோ கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
100 கிலோ கஞ்சா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 13:57 GMT
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
புதுக்கோட்டை பெரியார் நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சந்தேகத்திற்குரிய அந்த வீட்டிற்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கஞ்சா பண்டல், பண்டல்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை கைப்பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி. வந்திதா பாண்டே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த 100 கிலோ அளவிலான கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த ஒரு வாலிபரிடமும், இந்த கஞ்சா பண்டல்கள் தொடர்பாக மேலும் ஒரு தம்பதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.