ஓசூரில் 100 சதவிகித பேருந்துகள் இயக்கம்
ஒசூர் பகுதிகளில் அனைத்து பேருந்துகளும் கால அட்டவணைப்படி இயக்கப்பட்டது.;
பேருந்து இயக்கம்
தமிழகம் முழுவதும் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிப்பு செய்துள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு செய்தாலும் அனைத்து பேருந்துகளும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் போக்குவரத்து பணிமனையிலிருந்து அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.
ஒசூர் போக்குவரத்து மேலாளர் சீனிவாசன் கூறுகையில்: ஒசூர் பணிமனையிலிருந்து புறநகரான சென்னை,சேலம் உள்ளிட்ன பகுதிகளுக்கு 70 பேருந்துகளும், நகர்ப்புறத்திற்கு இயக்கப்படும் 75 பேருந்துகளும், 40 விரைவு பேருந்துகளும் கால அட்டவணைப்படி 100% இயக்கப்பட்டு வருகிறது. ஒசூர் வழியாக பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 400 பேருந்துகளும் தடையின்றி இயங்குவதால் பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்க போக்குவரத்து கழகம் சேவையாற்றும் என பேசினார்.