100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி !

சிவகங்கையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-04-16 06:35 GMT

விழிப்புணர்வு

பேரணி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அஞ்சல்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற நிலையில் ஏராளமான அஞ்சல ஊழியர்கள் பங்கேற்றனர்.

வருகிற 19 ஆம் தேதி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்திய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, அரசு துறைகளின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிவகங்கை தபால் துறை சார்பில் இன்று தலைமை தபால் நிலையத்திலிருந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

முன்னதாக இந்த பேரணியை கூடுதல் ஆட்சியர் சிவராமன் கொடியசைத்து துவக்கிவைத்த நிலையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனைவாசல் பகுதியை சென்றடைந்தது.

500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியில் விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம், வாக்களிப்போம், தேசம் காப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News