100 சதவீத வாக்குப்பதிவு - திருநங்கைகள் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு
பெரம்பலூரில் 100% வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகள் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்
Update: 2024-04-16 03:45 GMT
வரும் நாடாளுமன்ற பொதுதேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 100% வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிறப்பு தலைமையில் திருநங்கைகள் வாக்காளர் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளர் கோபால் உள்ளிட்ட அலுவலர்கள், திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.