100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு !

சேலம் மாநகராட்சி, மாவட்ட தேர்தல் பிரிவு, சேலம் மெட்ரோ போலிஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.

Update: 2024-04-16 06:45 GMT

 விழிப்புணர்வு


சேலம் மாநகராட்சி, மாவட்ட தேர்தல் பிரிவு, சேலம் மெட்ரோ போலிஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.

இதற்கு தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு குழு அலுவலரும், சேலம் மாநகராட்சி செயற்பொறியாளருமான மு.பழனிசாமி தலைமை தாங்கினார்.

போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், உதவி தேர்தல் அலுவலர்கள் அம்பாயிரநாதன், மயில், மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட கவர்னர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா கலந்து கொண்டு உறுதிமொழியை வாசித்தார்.அதை ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகே தொடங்கி நடைபெற்றது.

இந்த மாரத்தான், சோனா கல்லூரி, 5 ரோடு, புதிய பஸ் நிலையம், 4 ரோடு, அண்ணா பூங்கா வழியாக கலெக்டர் அலுவலகம் அருகே முடிவடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை சேலம் மெட்ரோ போலிஸ் ரோட்டரி சங்க தலைவர் சதீஷ் ராமபிரசாத், செயலாளர் ஷாநவாஸ், பொருளாளர் ஜோதிமுருகன், திட்டத்தலைவர் மோகன் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News