"100 சதவீதம் ஓட்டுப்பதிவு அஞ்சல் ஊழியர்கள் பேரணி"
100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், விழிப்புணர்வு பேரணி.
Update: 2024-04-11 05:09 GMT
காஞ்சிபுரம் தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் துவங்கிய பேரணி, பழைய ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் ஓட்டளிப்பதில் உறுதி கொள்ளுங்கள், ஓட்டளித்து உறுதிபடுத்துங்கள். பணம் வாங்காமல் நேர்மையாக ஓட்டளிப்போம், தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம், 100 சதவீத ஓட்டு, இந்தியர்களின் பெருமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடியும், பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியபடி சென்றனர்.