100 மனு அளித்தும் நடவடிக்கை இல்லை - மூதாட்டி தர்ணா
பட்டா வழங்க 100 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிவகாசியை சேர்ந்த மூதாட்டி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.;
Update: 2024-02-06 04:50 GMT
தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆனையூர் பகுதியைச் சார்ந்தவர் பாப்பா இந்த மூதாட்டி சிவகாசியில் வசித்து வரும் நிலையில் இவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் மாந்தோப்பு துரைச்சாமிபுரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலரும் தலையாரியும் ஐயப்ப ராஜ் என்பவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாப்பா என்ற மூதாட்டிக்கு பட்டா வழங்க மறுப்பதாகவும் ஆர்டிஓ அலுவலகத்தில் முறையான விசாரணை நடைபெறவில்லை எனவும் தன் மீது போலியான ஜாதி பிரச்சனையை தூண்டி விடுவதாகவும் 100 முறை மனு அளித்தும் தற்போது வரை தனக்கு எந்தவித விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி பாப்பா என்ற மூதாட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார் .இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.