100 மாணவர்கள் 100 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
திருச்சி பொன்னையா பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகள் சாதன முயற்சி நேற்று மாலை துவங்கியது.;
Update: 2024-06-04 00:51 GMT
திருச்சி பொன்னையா பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகள் சாதன முயற்சி துவங்கியது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல திருச்சி ராவணன் சிலம்பம் அகாடமி சார்பாக திருச்சி பொன்னையா பள்ளியில் 100 மாணவர்கள் 100 மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியானது நேற்று மாலை துவங்கியது.
இந்த போட்டியை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் இதில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் 4 பிரிவுகளாக கலந்துகொண்டு 100 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்த உள்ளனர்