100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் !
பெரம்பலூரில்மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார் .
By : King 24x7 Angel
Update: 2024-04-06 08:42 GMT
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார். பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதிநடைபெறுவதை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பெரம்பலூர மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியின் போது மாற்றுத் திறனாளி நல் அலுவலர் பொம்மி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.