100 % வாக்குப்பதிவு: கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி !
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைவாசல் அருகே பெரியேரியில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் சார்பில் மாணவிகள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
By : King 24x7 Angel
Update: 2024-04-06 12:35 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைவாசல் அருகே பெரியேரியில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் சார்பில் மாணவிகள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தேர்தல் அலுவலர் சேகர் தொடங்கி வைத்தார். சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் 150 பேர் மோட்டார் சைக்கிளில் தேசிய கொடி ஏந்தியபடி, தலைவாசல், தேவியாக்குறிச்சிஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள், 100 சதவீதம் வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தலைவாசல் வருவாய் ஆய்வாளர் மயில்சாமி, கிராம நிர்வாக அலுவலர் குமார், கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.