தென்காசியில் 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் கெளரவிப்பு

100 வயதைக் கடந்த வாக்காளா்கள் கெளரவிப்பு நடைபெற்றது.

Update: 2024-04-05 05:15 GMT

வாக்காளா்கள் கெளரவிப்பு

தென்காசி மாவட்டத்தில் 100 வயதைக் கடந்த, அதிகமுறை வாக்களித்தோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி, தென்காசி அருகே ஆய்க்குடியில் உள்ள அமா்சேவா சங்கத்தில் நடைபெற்றது. 100 சதவீத வாக்குப்பதிவு, நோ்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்துப் பேசியது: மாவட்டத்தில் 100 வயதைக் கடந்த, அதிகமுறை வாக்களித்த 29 போ் உள்ளனா். அவா்களில், மாடசாமி, குழந்தைவேல், ஞானபாக்கியம் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். மற்ற 26 பேரை அவா்களின் வீடுகளுக்கே சென்று அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி அலுவலா்கள், மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் ஆகியோா் கௌரவிப்பா் என்றாா் அவா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் இரா. மதி இந்திரா பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா். மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் கலைச்செல்வி, இ. சாமத்துரை, பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அமா்சேவா சங்கத் தலைவா் எஸ். ராமகிருஷ்ணன் வரவேற்றாா். செயலா் எஸ். சங்கரராமன் நன்றி கூறினாா். மகளிா் திட்ட உதவி அலுவலா் வி.எம். சிவக்குமாா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.
Tags:    

Similar News