எனக்கு 1000 இன்னும் தரல: முதல்வரிடம் முறையிட்ட பெண்

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு உழவர் சந்தை பகுதியில் வாக்குகள் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை அதிரித்து சேகரித்தார்.;

Update: 2024-03-31 11:23 GMT

முதல்வரிடம் முறையிட்ட பெண் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சின்னிம்பாளைம் பகுதியில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஈரோடு கரூர் , நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இதற்காக நேற்றிரவு சேலம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு ஈரோட்டிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். இதனிடையே இன்று சம்பத்நகர் பகுதியிலுள்ள உழவர்சந்தை பகுதியில் நடைபயிற்சியை மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

மேலும் உழவர் சந்தையில் இயங்கி வரும் 120 க்கும் கடைகளில் வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலையை கேட்டறிந்து வாக்குகள் சேகரித்தார்.மேலும் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.அப்போது பெண்கள் , குழந்தைகள் முதல்வர் ஸ்டாலின் கை குலுக்கியும் , செல்பியும் எடுத்தனர்.

Tags:    

Similar News