டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 1000 பணியாளர்கள் - அமைச்சர் முத்துசாமி

கோவையில் டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் மருத்துவர்கள்,ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளதாகவும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.;

Update: 2024-01-12 01:42 GMT

அமைச்சர் முத்துசாமி 

கோவை:மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின்கீழ் தனியார் வங்கியின் மூலம் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு பத்து பேட்டரியால் இயங்கும் லோடு ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பேட்டரியை பயன்படுத்தி ஓடும் இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றவர் மாநகராட்சி பகுதிகளில் 68 சதவீத சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன எனவும் 760 பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாக தெதிவித்தார். 445 சாலை பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறியவர் பில்லூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தற்போது டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் மருத்துவர்கள்,ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளதாகவும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என்றவர் பொது மக்கள் வீடுகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.பொங்கல் பரிசை முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு இடங்களில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதாக கூறியவர் 14 ந் தேதி வரை தொடர்ந்து பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றவர் நிதி பிரச்சனை இருந்தும் யாரும் விடுபடக் கூடாது என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 1537 கடைகளுக்கு 122.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்பட இருப்பதாக கூறியவர் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளது எனவும் 636 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக கூறியவர் இதன் மூலம் இருபத்தி ஏழு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.மகளிர் உரிமைத்தொகை,இலவச பயண பேருந்து,காலை உணவு திட்ட ம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தபட்டு வருகிறது என தெரிவித்தார்.

கோவையில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் அதை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதியில் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.பொங்கல் மதுபான விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றவர் டெட்ரா பாக்கெட் விற்பனை குறித்த பரிசீலித்து வருவதாகவும் பின்னர் இதுகுறித்து முடிவு எடுக்கபடும் என்றார்.

Tags:    

Similar News