108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊர்தி சங்க கலந்தாய்வுக் கூட்டம்
108 ஆம்புலன்ஸ் அவசரகால உறுதி சங்க கலந்தாய்வுக் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.;
அரியலூர் மார்ச்.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் மாவட்ட நேரடி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார் . மாவட்ட செயலாளர் அரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாக்யராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 6000 க்கு மேல் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் அவர்களுடைய வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு இந்த 108 நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும் .இதில் உள்ள தொழிலாளர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழ்நாடு முதல்வர் 108 பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு நிரந்தரம் செய்யவும் திமுக தலைவர் கவனத்திற்கு மாநிலத் தலைமை கொண்டு செல்ல வேண்டும் , இந்த ஆண்டு ஊதிய உயர்வை 30% வழங்க வேண்டும், தீபாவளி ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .