108 ஆம்புலன்சை முறையாக இயக்க கோரிக்கை
மூலனூரில் 108 ஆம்புலன்சை முறையாக இயக்க கோரிக்கை;
மக்களின் உயிரைக்காக்கும் அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் அரசுப் பராமரிப்பில் நடைபெற்று வருகிறது. நோயாளிகளைக் காப்பாற்றும் இந்த சேவை குறித்து எழும் புகார் மூலனூரில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:- மூலனூர் நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை இருந்தும் அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் உடனே வராமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்த நிமிடங்களில் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்கிறார்கள். 108 சேவைக்கு அழைத்தால் இவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதுதான் கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் இது குறித்து துறை சார்ந்து புகார் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.தனியார் ஆம்புலன்சுக்கு குறைந்த பட்ச கட்டணமாக அதிக தொகை வாங்குவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை தொடர்பான உபகரண வசதிகளோ செவிலியரோ இல்லாத வெறும் ஆம்னிவேன்களே ஆம்புலன்சாக பயன்படுத்தப்படுகிறது. சிலநேரங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்து செல்கிறார்கள். அரசு மருத்துவமனையில் 108 சேவை மையத்தில் முறையான ஆய்வு நடத்தி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது