108 திருவிளக்கு வழிபாடு
பௌர்னமி தினங்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (10.07.2025) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் தொடங்கி வைத்தனர்;
பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் முன்னிலையில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு அவர்களால் கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பௌர்ணமி தினங்களில் 20 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இத்திட்டம் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்திடும் விதமாக மேலும் 05 அம்மன் திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாதந்தோறும் பௌர்னமி தினங்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (10.07.2025) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாட்டினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் 108 பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வில், திருச்சி மண்டல இணை ஆணையர் திருமதி சி.கல்யாணி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, ஆய்வாளர் செல்வி தீபலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.