108 ஆம்புலன்ஸ்; 1.50 லட்சம் பேர் பயனடைந்தனர்
டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1.50 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 1,50,284 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் (EMRI Green Health Service) மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை டெல்டா மாவட்டங்களில் பயனடைந்தோர் எண்ணிக்கை பின்வருமாறு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 36 வாகனங்களின் மூலம், இதய நோய தொடர்பாக 3889 பயனாளிகளும், வாகன விபத்தில் காயமடைந்தோர் 11481, மகப்பேறு தொடர்பாக 14778 பயனாளிகளும் மற்றும் இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 28910, மொத்த பயனாளிகள் 59058 தஞ்சாவூர் மாவட்டத்திலும். திருவாரூர் மாவட்டத்தில் 21 வாகனங்களின் மூலம், இதய நோய தொடர்பாக 2338 பயனாளிகளும், வாகன விபத்தில் காயமடைந்தோர் 5489, மகப்பேறு தொடர்பாக 9554 பயனாளிகளும் மற்றும் இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 17576, மொத்த பயனாளிகள் 34957 திருவாரூர் மாவட்டத்திலும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 வாகனங்களின் மூலம், இதய நோய தொடர்பாக 1854 பயனாளிகளும், வாகன விபத்தில் காயமடைந்தோர் 3627, மகப்பேறு தொடர்பாக 10900 பயனாளிகளும் மற்றும் இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 14065, மொத்த பயனாளிகள் 30446 நாகப்பட்டினம் மாவட்டத்திலும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 வாகனங்களின் மூலம், இதய நோய தொடர்பாக 1637 பயனாளிகளும், வாகன விபத்தில் காயமடைந்தோர் 4278, மகப்பேறு தொடர்பாக 8529 பயனாளிகளும் மற்றும் இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 11379, மொத்த பயனாளிகள் 25823 மயிலாடுதுறை மாவட்டத்தில் பயனடைந்துள்ளனர்.