108 ஆம்புலன்ஸ் பணி வாய்ப்பு அறிவிப்பு !
கும்பகோணத்தில் (பிப்.24) 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது
Update: 2024-02-23 11:55 GMT
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை கட்டிடத்தில் உள்ள 108 அலுவலகத்தில், பிப்.24 சனிக்கிழமை எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் நேர்காணலில் பி.எஸ்.சி., நர்சிங், A.N.M., G.N.M., D.M.L.T., டிப்ளமோ இன் பார்மசி, BSc., மைக்ரோ பயாலஜி, விலங்கியல், தாவரவியல், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, தாவர உயிரியல் போன்ற கல்வி தகுதி உடையோர் பங்கேற்கலாம். மாதம் 16,020 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். எழுத்துத் தேர்வு, அடிப்படை மருத்துவ அறிவு பரிசோதனை, மனித வளத்துறை நேர்காணல் நடத்தப்படும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 50 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். வகுப்பறை, மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சார்ந்த பயிற்சி தரப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு, அலைபேசி எண் 7550208108 ஐ தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.