கைலாசநாதர் கோயிலில் 108 சங்கு அபிஷேகம்
Update: 2023-12-06 10:21 GMT
சங்கு அபிஷேகம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத சோம வாரத்தையொட்டி சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதில் கோ பூஜை, பிள்ளையார் வழிபாடு, ஹோமம் வளர்த்தல், ருத்ரம் பாராயணம் நடைபெற்றது. 108 சங்குகளுக்கு தீபாராதனை நடந்தது அதையடுத்து சிவனுக்கு சங்காபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் கெங்கவல்லி சுற்று வட்டார பொது மக்கள் பங்கேற்றனர்.