பரமேஸ்வரர் ஆலயத்தில் 108 கலசாபிஷேகம்
பஞ்சமாதேவி அருள்மிகு பரமேஸ்வரர் ஆலயத்தில் 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.;
பஞ்சமாதேவி பரமேஸ்வரர் ஆலயத்தில் 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
அருள்மிகு பரமேஸ்வரர் ஆலயத்தில் 108 கலசாபிஷேகம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சமாதேவி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பரமேஸ்வரர் ஆலயத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 கலசங்கள் அமைக்கப்பட்டு, யாக வேள்வி நடத்தப்பட்டது.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும், திருமூர்த்திக்கும் 108 கலசாபிபஷேகம் மற்றும் தீபாதாரணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சமாதேவி பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.