ஆத்தூர் : சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் 108 லிங்க அபிஷேகம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் நரசிங்கபுரத்தில் சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி முன்னிட்டு 108 லிங்க அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
Update: 2024-03-09 03:38 GMT
சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் 108 லிங்க அபிஷேகம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் 108 சிவலிங்கத்திற்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஸ்ரீ சொரபுரீஸ்வரருக்கு பல்வேறு வாசனை மலர்களாலும் விலை உயர்ந்த நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து குருக்கள் அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மகா சிவராத்திரி வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் அன்னதானம் வழங்கப்பட்டன.